வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.78 ஆயிரம் சம்பளத்தில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!

21st Sep 2022 02:54 PM

ADVERTISEMENT


பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப்லைன் பிரிவில் காலியாக உள்ள பொறியியலாளர் உதவியாளர் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். PL/HR/ESTB/RECT-2022(2)

பணி: Engineering Assistant
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
வயதுவரம்பும்: 12.09.2022 தேதியின்படி 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Automobile,Electrical, Electrical & Electronics, Electronics & Telecommunication, Electronics & Radio Communication, Instrumentation, Instrumentation & Control Engineering, Chemical Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Technical Attendant-I
காலியிடங்கள்: 33
சம்பளம்: மாதம் ரூ. 23,000 - 78,000
வயதுவரம்பும்: 12.09.2022 தேதியின்படி 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician, Electronic Mechanic, Fitter, Instrument Mechanic, Instrument Mechanic(Chemical Plant), Machinist, Machinist(Grinder), Mechanic-cum-Operator Electronics Communication System, Turner, Wiremen, Draughtsman(Mechanical), Mechanic Industrial Electronics,Information Technology & ESM, Mechanic(Refrigeration & Air Conditioner), Mechanic(Diesel) போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

ADVERTISEMENT

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://plapps.indianoil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT