வேலைவாய்ப்பு

கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு 

28th May 2022 05:35 PM

ADVERTISEMENTகொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 261 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Ship Draftsman - 16
பணி: Junior Technical Assistant - 05
பணி: Laboratory Assistant
பணி: Store Keeper - 04
பணி: Junior Commercial Assistant - 02
பணி: Assistant - 07
பணி: Welder Cum Fitter (Welder/ Welder (Gas & Electric))- 222
பணி: Shipwright Wood - 03 

ADVERTISEMENT

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், சில பணிகளுக்கு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 06.06.2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://cochinshipyard.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2022

மேலும் விபரங்கள் அறிய https://cochinshipyard.in அல்லது https://cochinshipyard.in/uploads/career/ce6ba9f0cac19ad6755d994a32c383cd.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT