வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கலாம் வாங்க... இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

26th May 2022 02:24 PM

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சிவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுயும் ஆர்வமும் உள்ள இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: மனநல மருத்துவர் - 01
பணி: மருத்துவ அலுவலர் - 01
பணி: செவிலியர்(உறைவிடர்) - 02
பணி: இல்ல காப்பாளர் - 01
பணி: சமூகப் பணியாளர் - 02
பணி: பராமரிப்பு உதவியாளர் - 04
பணி: தொழிற் பயிற்சியாளர் - 01
பணி: பாதுகாவலர் - 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளநிலைப் பட்டம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in அல்லது www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT