வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்தியன் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!

25th May 2022 02:56 PM

ADVERTISEMENT

 


இந்தியன் வங்கியில் மேலாளர், முதுநிலை மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 312

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Manager - 35
சம்பளம்: மாதம் ரூ.63,840 - 78,230
வயதுவரம்பு: 25 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 
 
பணி: Manager - 111 
சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: Assistant Manager - 162
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,800
வயதுவரம்பு: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
 
பணி: Chief Manager - 04
சம்பளம்: மாதம் ரூ.76,010 - 89,890
வயதுவரம்பு: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பட்டதாரிகள், சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:  எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175. மற்ற பிரிவினர் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2022/05/Detailed-Advertisment-for-Recruitment-of-Specialist-Officers.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT