வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?- ரூ.71,900 சம்பளத்தில் செயல் அலுவலர் வேலை

23rd May 2022 01:35 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-IV பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் மற்றும் இந்து  சமயத்தை பின்பற்றும் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: செயல் அலுவலர் நிலை-IV

காலியிடங்கள்: 36

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

ADVERTISEMENT

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 25 நிறைவடைந்து 42க்குள் இருக்க வேண்டும்.  வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது இணைக்கல்வித் தகுதி, இளங்கலையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2022

தேர்வு நடைபெறும் நாள்: 11.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/13_2022_EO_GR_IV_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT