வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? - விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

23rd May 2022 04:50 PM

ADVERTISEMENT


தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Clerk Cum Typist (Under Sports Quota)

காலியிடங்கள்: 05

ADVERTISEMENT

சம்பளம்: 7ஆவது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும். 

வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க 

தகுதி: குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விளையாட்டு தகுதி: வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், பல்கலைக்கழக அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது 3 ஆம் இடமாவது பெற்றிருக்க வேண்டும். 01.04.2019 தேதிக்கு பின்னர் விளையாட்டில் பெற்ற சாதனைகள் மட்டும் விளையாட்டுத் தகுதியாத கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டு தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி, பெண்கள் ரூ.250, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Chennai. என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in அல்லது www.rrcmas.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway, Egmore, Chennai - 600 008.
  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
13.06.2022

ADVERTISEMENT
ADVERTISEMENT