வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..?  எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

16th May 2022 03:58 PM

ADVERTISEMENTபொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு நாளைக்குள் (மே.17) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

அறிவிப்பு எண். CRPD/SCO/2022-23/06

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: System Officer/Executive

ADVERTISEMENT

காலியிடங்கள்: 35

வயதுவரம்பு: 31.03.2022 தேதியின்படி, 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: கணினி அறிவியல், மென்பொருள் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்துறைகளில் தகவல் தொழிற்நுட்பத் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதிாயனவர்கள் தேர்வு  செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் நாள்: 25.06.2022

தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 16.06.2022 அன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bank.sbi.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/260422-Advt.+SCO-2022-23-06.pdf/ce9559df-19b6-a52f-8efe-767427c77121?t=1650976013752 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT