வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா..?

16th May 2022 04:16 PM

ADVERTISEMENT

 

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க நாளை நாளை கடைசி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

விளம்பர எண். CRPD/SCO-CISO/2022-23/04

பணியிடம்: மும்பை

ADVERTISEMENT

பணி: Chief Information Security Officer 

வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் அல்லது அறிவியல் துறை பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எம்சிஏ அல்லது தகவல் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/web/careers அல்லது
https://www.sbi.co.in/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/260422-Detailed+English+Advertisement+CISO-04.pdf/a8c1585f-acdc-21c9-cf63-bc518636620d?t=1650974682577 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT