வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

2nd May 2022 04:14 PM

ADVERTISEMENT


சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 60 மருத்துவப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Obstetrician /Gynecologist - 09
தகுதி:  மருத்துவத் துறையில் எம்டி, (டிஜிஒ) அல்லது எம்பிபிஎஸ், டிஜிஒ முடித்திருக்க வேண்டும். 

பணி: Pediatrician - 08
தகுதி மருத்துவத் துறையில் குழந்தை மருத்துவத்தில் எம்டி, அல்லது எம்பிபிஎஸ், டிசிஎச் முடித்திருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Surgeon - 11
தகுதி: எம்பிபிஎஸ், எம்எஸ் முடித்திருக்க வேண்டும்.  

பணி: GeneralMedicine - 13
தகுதி: எம்பிபிஎஸ், எம்டி முடித்திருக்க வேண்டும். 

பணி: Orthopaedic - 03
தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் எலும்பியல் பிரிவில் எம்எஸ் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.90,000 வழங்கப்படும்.

பணி: Dentists - 16
தகுதி: பல்மருத்துவத் துறையில் பிடிஎஸ், எம்டிஎஸ் முடித்திருக்க வேண்டும்.   
சம்பளம்: மாதம் ரூ. 34,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டோர் மாநகராட்சியின் கீழ்உள்ள 15 மண்டலங்களில் ஏதாவதொரு மண்டலத்தில் பணியமர்த்தப்படலாம். 

விண்ணப்பிக்கும் முறை: chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
அல்லது gcc2021hremployment@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The City Health Officer, Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003, Phone: 044 – 2561 9330.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/Specialist%20-%20Oppointment%20Note.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT