வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது

29th Mar 2022 02:16 PM

ADVERTISEMENT

 

சென்னை: குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் குரூப் 4 தேர்வு குறித்த அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும்ஸ, போட்டித் தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்படும் என்றும், மொத்தம் 5,255 காலியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெறும் என  இந்த ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 குறித்த தவறான அறிவிக்கை சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ளவேண்டாம் என தேர்வாணையம் தெரிவிக்கிறது.

தேர்வாணையத்தின் அனைத்து அறிவிக்கைகளும் தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி -4-க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில்,  இணையவழி விண்ணப்பம் செய்வதில் புதிய நடைமுறை தொடர்பான செய்திகளையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

தேர்வாணைய தலைவர் கா. பாலசந்திரன் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பால் போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் தேர்வுகளுக்கு இனி விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களை பிடிஎஃப் வடிவில் பதிவேற்ற வேண்டும் என்றும் சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு இருந்தால் ஓடிஆர் கணக்கு மூலம் சரிசெய்ய அவகாசம் வழங்கப்படுவது உள்ளிட்ட புதிய நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது. 

இதுகுறித்த விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/21_2022_PRESS%20RELEASE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT