வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை வேண்டுமா?

19th Mar 2022 03:17 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 29 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம்  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

அறிக்கை எண். No.08/MRB/2022 

பணி: Junior Analyst 

ADVERTISEMENT

காலியிடங்கள்:  29

சம்பளம்: மாதம் ரூ. 34,400 - 1,15,700

தகுதி: வேதியியல் அல்லது உயிர்வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அல்லது பால்வளத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல் அல்லது உணவு தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, ஒசி பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32, 42, 50க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயதுவரம்பில்லை. 
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவை, பெண்கள் பிரிவைச் சேர்ந்த ரூ.500. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://mrb.tn.gov.in/pdf/2022/JA_notification_160322.pdf ன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT