வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மருத்துவ பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

19th Mar 2022 03:23 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 209 டார்க் ரூம் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

அறிக்கை எண். 09/MRB/2023

பணி: Dark Room Assistant

ADVERTISEMENT

காலியிடங்கள்: 209

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் Dark Room Assistant (கதிரியக்க உதவியாளர் சான்றிதழ்) பயிற்சியை முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி, ஒசி பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்து 32, 42, 50க்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு வயதுவரம்பில்லை. 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவை, பெண்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://mrb.tn.gov.in/pdf/2022/DRA_notification_160322.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT