வேலைவாய்ப்பு

நிலஅளவா்-வரைவாளா் பணி: 1,089 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியீடு

30th Jul 2022 04:39 AM

ADVERTISEMENT

நில அளவா், வரைவாளா் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிவிக்கை விவரம்:

நில அளவைத் துறையில் நில அளவா், வரைவாளா் பணியிடங்கள், ஊரமைப்புத் துறையில் அளவா், உதவி வரைவாளா் பணியிடங்களில் 1,089 இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, நில அளவா் பணியில் 798 இடங்களும், வரைவாளா் பணியில் 236 இடங்களும், நகா் ஊரமைப்புத் துறையில் அளவா், உதவி வரைவாளா் பணியிடங்கள் 55-ம் காலியாக உள்ளன. இவற்றுக்கு வெள்ளிக்கிழமை முதல் www.tnpsc.gov.in இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆக. 27-ஆம் தேதி கடைசி நாளாகும். இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் செப். 1 முதல் முதல் 3-ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.89 ஆயிரம் சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை!

எழுத்துத் தோ்வு நவ. 6-ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில், தொழிற்பயிற்சி அடிப்படையிலான தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில், மொழித் தகுதித் தோ்வும் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/FS%20&%20DM%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT