வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ. 1,51,100 சம்பளத்தில் மத்திய அரசுப் பள்ளிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

7th Jul 2022 03:12 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT

 

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1,616 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1,616

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Principal (Group-A) - 12
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுநிலைப் பட்டத்துடன் பி.எட் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Post Graduate Teachers (PGTs) (Group-B):
காலியிடங்கள்: 397
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1 Biology - 42 
2 Chemistry - 55 
3 Commerce - 29 
4 Economics - 83
5 English - 37 
6 Geography - 41 
7 Hindi - 20
8 History - 23
9 Maths - 26 
10 Physics -19
11 Computer Science - 22
சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,51,100
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teachers (TGTs) (Group-B):
காலியிடங்கள்: 683 
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. English - 144 
2. Hindi -147 
3. Maths - 167
4. Science - 101 
5. Social Studies - 124 

பணி: Trained Graduate Teachers (Third Language) (Group-B)
காலியிடங்கள்: 343 
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Assamese - 66
2 Bodo - 09
3 Garo - 08
4 Gujarati - 40
5 Kannada - 08 
6 Khasi - 09 
7 Malayalam - 11 
8 Marathi - 26 
9 Mizo - 09 
10 Nepali - 06 
11 Odiya - 42 
12 Punjabi - 32 
13 Tamil - 02 
14 Telugu - 31 
15 Urdu - 44 
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: இளநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Miscellaneous Category of Teachers (Group-B) 
காலியிடங்கள்: 181
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Music - 33 
2. Art - 43 
3. PET Male - 21
4. PET Female - 31
5. Librarian - 53 
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: முதல்வர் பணிக்கு ரூ.2,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.1,800, இதர ஆசிரியர் பணிகளுக்கு ரூ.1,500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

கட்டணச் சலுகை: எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.gov.in No என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://cbseitms.nic.in/nvsrecuritment/Notification/Detailed_DRD_2022-23.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT