வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

29th Jan 2022 04:43 PM

ADVERTISEMENTமத்திய அரசில் காலியாக உள்ள முதுநிலை நிர்வாக அதிகாரி, உதவி வேலைவாய்ப்பு அலுவலர், துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், அதிகாரி மற்றும் உதவி பேராசிரியர் (ஆயுர்வேதம்) போன்ற 14 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.02/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Senior Administrative Officer 
காலியிடங்கள்: 08
தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் பணியாளர் மேலாண்மை அல்லது தொழில்துறை உறவுகள் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பது விரும்பத்தக்கது.  வேலை, அறிவியல், தொழில்துறை, தொழில்நுட்ப அமைப்புகள் துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Assistant Employment Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: வணிகம்,சமூகப் பணி, சமூகவியல், பொருளாதாரம், புள்ளியியல், உளவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்மந்தப்பட்ட பணி தொடர்பாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

பணி: Sub-Regional Employment Officer/Officer
காலியிடங்கள்:  01 
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சமூக நலம், சமூக பணி, பொருளாதாரம், புள்ளியியல், உளவியல், வணிகம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி சம்மந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Ayurveda)
காலியிடங்கள்: 04 
வயதுவரம்பு: 45-50க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in அல்லது http://www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Advt-02-2022-engl-210122.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | கடற்படையில் அதிகாரி வேலை: பொறியியல், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்களுக்கு வாய்ப்பு

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT