வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ஹெல்த்கேர் சென்டரில் வேலை

27th Jan 2022 01:00 PM

ADVERTISEMENT


வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ஹெல்த்கேர் சென்டரில் நிரப்பப்பட உள்ள செவிலியர், மருத்துவர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மருத்துவர்(பொது) - 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,200 - 60,000
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

பணி: மருத்துவர் (பல்) - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 50,000
தகுதி: பல் மருத்துவத்துறையில் பிடிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: செவிலியர் - 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 30,000
தகுதி: செவிலியர் பிரிவில் பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: மருந்தாளுநர்(பொது) - 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.8,200 - 30,000
தகுதி: பார்மசி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: தூய்மை பணியாளர் - 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 12,000
தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கலாம் | அழைக்கிறது ரயில்டெல் நிறுவனம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.simcoagri.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து நேரிலோ அல்லது கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மேலாண்மை இயக்குநர், தலைமை அலுவலகம், டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்தி நிலையம் அருகில், வேலூர் - 632 004

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2022

இதற்கு விண்ணப்பிக்கலாம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT