வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... துணை ராணுவ படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

27th Jan 2022 02:34 PM

ADVERTISEMENT


மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவ படைகளில் ஒன்றான் பிஎஸ்எஃப்-இல் காலியாக உள்ள 2788 Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Constable (Tradesmen) 

மொத்த காலியிடங்கள்: 2788(ஆண்கள் - 2651, பெண்கள் - 137)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட டிரேடில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள்: 167.5 செ.மீ உயரமும்,  78 முதல் 83 செ.மீ மார்பளவுவும், 5 கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும். 
பெண்கள்: 157 செ.மீ உயரமும், 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 8.30 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கலாம் | நவோதய வித்யாலயா பள்ளிகளில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி மற்றும் தொழிற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தார்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.03.2022

இதற்கு விண்ணப்பிக்கலாம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT