வேலைவாய்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ஏராளமான வேலைகள்: விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

12th Jan 2022 02:12 PM

ADVERTISEMENT

 

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான ஆண், பெண் விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 249

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Athletics - 90
2. Boxing - 18
3. Basket ball - 08
4. Gymnastics - 05
5. Football - 10
6. Hockey - 15
7. Hand ball - 06
8. Judo - 11
9. Kabaddi - 08
10. Shooting - 03
11. Swimming - 19
12.  Volley ball - 05
13. Weight Lifting - 23
14. Wrestling - 14
15. Taekwondo - 08

ADVERTISEMENT

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  சர்வதேச, தேசிய, பல்கலை இடையிலான போட்டிகள், தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வென்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். 

உயரம்: குறைந்தது ஆண்கள் 167 செ.மீட்டரும்,  பெண்கள் 153 செ.மீட்டருக்கும்  இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, புரபிசியன்சி தேர்வு மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் டிரெய்னி அனலிஸ்ட் வேலை

விண்ணப்பிக்கும் முறை : https://cisfrectt.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2022

மேலும் விபரங்கள் அறிய https://drive.google.com/file/d/12HPfnC32t820IzxugmWCtrbJhbu_Hn0b/view என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT