இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 400 அதிகாரிப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்.:3/2022-NDA-I
தேர்வு பெயர்: National Defence Academy & Navel Academy Examination(II) - 2022
மொத்த காலியிடங்கள்: 400
பிரிவு வாரியான காலியிடங்கள்:
1. National Defence Academy - 370
(Army - 208, Navy - 42, Air Force - 120)
2. Naval Academy - 30
வயதுவரம்பு: 02.07.2003 - 01.07.2006-க்கு இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: National Defence Academy பணிக்கு ஏதாவதொரு பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Navy, Air Force பணிக்கு இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2022
தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை மற்றும் மதுரை
எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2022
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2022
மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.