வேலைவாய்ப்பு

NIPER-இல் பிளஸ் 2, பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

23rd Feb 2022 02:51 PM

ADVERTISEMENT


ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய மருந்து ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் (NIPER) கல்லூரியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். NIPER-HYD/01/2021-22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Scientist/Technical Supervisor Grade-I/II - 05
வயதுவரம்பு: கிரேடு-I பணிக்கு 40க்குள்ளும், கிரேடு-II பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

 பணி: Technical Assistant(Computer Section) - 01
பணி: Accountant - 02
பணி: Receptionist Cum Telephone Operator - 01
பணி: Store Keeper - 01
பணி: Assistant Grade-I - 01
பணி: Assistant Grade-II - 03
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Technical Assistant - 04
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்க | பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தகுதி: எம்.எஸ்சி., எம்.பார்ம்., எம்.வி.எஸ்சி.,போன்ற ஏதாவதொரு படிப்புடன் 4 ஆண்டு ஆராய்ச்சி அல்லது ஆசிரியர் அனுபவம் பெற்றிப்பவர்கள், கணினி அறிவியல் பிரிவில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், பி.காம் பட்டத்துடன் 3 ஆண்டு அனுபவம், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பவர்கள், பி.காம், பி.எஸ்சி., முடித்து 3 ஆண்டு அனுபவம் பெற்றிருபவர்கள், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.niperhyd.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2022

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT