வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைகள்!

10th Feb 2022 01:16 PM

ADVERTISEMENT


இந்திய பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.CC/1/2022.

பணி: Assistant Engineer Trainee

பிரிவுவாரியான காலியிடங்கள்: 
1. Computer Science - 37 
2. Electrical - 60
3. Civil - 04
4. Electronics - 04

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.38,500

வயதுவரம்பு: 31.12.2021 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பிடெக், பி.எஸ்சி(இன்ஜி) முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  குழு விவாதம். நேர்முகத் தேர்வு மற்றும் கேட்-2021 இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டண செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: ww.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2022

மேலும் விவரங்கள் அறிய recruitment@powergrid.co.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புக் கொள்ளவும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT