வேலைவாய்ப்பு

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1149 பணியிடங்கள்: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு

10th Feb 2022 01:33 PM

ADVERTISEMENT


   
இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) கான்ஸ்டபிள்/பயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Constable/Fire

காலியிடங்கள்: 1149

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: பிகார் 123, உத்தரபிரதேசம் 112, அசாம் 103, ஜார்க்கண்ட் 87, ஆந்திரம் 79, மஹாராஷ்டிரம் 70, ஒடிசா 58, மேற்கு வங்கம் 54, தமிழகம் 41, ஜம்மு காஷ்மீர் 41.

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 4.3.2022 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடங்களுடன் கூடிய பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

உயரம்: குறைந்தபட்ச உயரம் 170 செ.மீ. இருக்க வேண்டும். 
மார்பளவு: சாதாரண நிலையில் 80 செ.மீ. விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 04.03.2022

மேலும் விவரங்கள் அறிய www.cisfrectt.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT