மத்திய அரசு நிறுவமான தேசிய இரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி உள்ளிட்ட 20 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 20
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist - 10
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sr. Scientist - 04
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.
பணி: Principal Scientist - 06
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்,கெமிக்கல் டெக்னாலஜி, பாலிமர் இன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ்,மெட்டீரியல் இன்ஜினியரிங், பாலிமர் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம். நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி, நுண்ணுயிர் அறிவியல், வேதியியல் அறிவியல், உயிர் வேதியியல், உயிர்வேதியியல் இன்ஜினியரிங் போன்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசுத் துறைகளில் 5000 பணியிடங்கள்: எஸ்எஸ்சி அறிவிப்பு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ‘Director, National Chemical Laboratory’ என்ற பெயருக்கு ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruit.ncl.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள Controller of Administration, CSIR - National Chemical Laboratory, Dr. Homi Bhabha Road Pune – 411008 (Maharashtra) என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.03.2022
மேலும் விவரங்கள் அறிய https://recruit.ncl.res.in/ அல்லது https://recruit.ncl.res.in/Pdf/CSIR-NCL_Advertisement%20No%2001-2022.pdf ZVdJ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மத்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!