வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தினமணி



புதுதில்லியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 103 ஆபீசர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer (Fire Safety) 
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,400
தகுதி: பொறியியல் துறையில் Fire Technology, Fire Engineering/ Safety and Fire Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Manager (Security)
காலியிடங்கள்: 80
சம்பளம்: மாதம் ரூ.48,170 - 69,810
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1003, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.59. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். 

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Chief Manager (Recruitment Section), HRD Division, Punjab National Bank, Corporate Office, Plot No.4, Sector 10, Dwarka, New Delhi - 110 075.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT