வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... எல்ஐசியில் உதவியாளர், உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

18th Aug 2022 02:45 PM

ADVERTISEMENT


ஆயுள் காப்பீடு கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணி: Assistant
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.22,730
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Manager
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.53,620
வயதுவரம்பு: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியில் டிஎம்இ பிரிவிற்கு 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும். சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.lichousing.com/static-assets/pdf/Detailed%20Advertisement.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true என்ற அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT