வேலைவாய்ப்பு

என்எல்சி நிறுவனத்தில் ஐடிஐ, பட்டதாரிகளுக்கு தொழில்பழகுநர் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறா நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சி இடங்கள் என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு வழங்கியவர்களுக்கான பணியிடங்களாகும். 

விளம்பர எண். L & DC.02/2022/1

பயிற்சியின் பெயர்: Trade Apprentice

காலியிடங்கள்: 369

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 60
2. Turner - 22
3. Welder - 55
4. Mechanic (Motor Vehicle) - 60
5. Mechanic (Diesel) - 10
6. Mechanic (Tractor) - 05
7. Electrician - 62
8. Wireman - 55
9. Carpenter - 05
10. Plumber - 05
11. Stenographer - 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

உதவித் தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.10,019 உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சியின் பெயர்: Non Engineering Apprentice

காலியிடங்கள்: 105

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. PASAA - 20
2. Commerce - 25
3. Copmputer Science - 35
4. Computer Application - 20
5. Business Administration - 20
6. Geology - 05

தகுதி:  சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, பட்டப்படிப்பிலி பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் 23.09.2022 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பொது மேலாளர், நிலம் எடுப்பு அலுவலகம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம். நெய்வேலி - 607 803

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24,08.2022

விண்ணப்பப் பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 31.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/NET%20ADVERT-TRADE%20and%20NON%20ENGINEERING%20%20-PAPs.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT