வேலைவாய்ப்பு

889 மருந்தாளுநா் பணியிடங்கள்: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

10th Aug 2022 01:25 AM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 889 மருந்தாளுநா் பணியிடங்களுக்கு புதன்கிழமை முதல் இணையவழியே விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் தெரிவித்தது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், தொழில்நுட்பனா்கள் என பல்வேறு பணிகளுக்கு 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் வரும் செப்டம்பா் மாதத்துக்குள் நிரப்பப்படவுள்ளன. அதன்படி, 889 மருந்தாளுநா் பணியிடத்துக்கான அறிவிப்பை எம்ஆா்பி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அதன்படி, மருந்தாளுநா் பணியிடங்களுக்கு புதன்கிழமை (ஆக.10) முதல் ஆக.30 வரை www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

தோ்வு தேதி குறித்த அறிவிப்பு பின்னா் தெரிவிக்கப்படும் என்றும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் ரூ.300 என்றும், மற்றவா்களுக்கு கட்டணம் ரூ.600 என்றும் தெரிவிக்கப்பட்டது.

கல்வித் தகுதி, வயது உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தை பாா்த்து அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவ தோ்வாணையம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT