வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... வனத்தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

8th Aug 2022 10:47 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து செப்டம்பர் 6 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: வனத்தொழில் பழகுநர்

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500

ADVERTISEMENT

வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராகவும், 32 வயது நிறைவடைந்தவராகவும் இருத்தல் கூடாது. 

தகுதி: வனவியலில் இளங்கலை பட்டம் அல்லது விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், பொறியியல் (அனைத்து பொறியியல் பாடங்களும் வேளாண் பொறியியல் உட்பட), சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம்,இயற்பியல், புள்ளிவிவரங்கள், வனவிலங்கு உயிரியல், விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வில் பெற்று மதிப்பெண்கள், உடற்தகுதி தேர்வு மற்றும் வாய் மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், உதகமண்டலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.12.2022 முதல் 13.12.2022

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/20_2022_Group_VI_Forest%20App_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT