வேலைவாய்ப்பு

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

8th Aug 2022 03:38 PM

ADVERTISEMENT


மும்பையில் உள்ள இரசாயன மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 01062022

பணி: Officer(Marketing)

காலியிடங்கள்: 18

ADVERTISEMENT

வயதுவரம்பு: 34 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

தகுதி: அறிவியல், பொறியியல், வேளாண்மை, வேளாண் வேதியியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சந்தையியல், வேளாண் வணிக மேலாண்மை பிரிவில் எம்பிஏ முடித்து 2 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதணனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.rcfitd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2022

ADVERTISEMENT
ADVERTISEMENT