வேலைவாய்ப்பு

ராணுவத்தில் வேலை வேண்டுமா?-  விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

2nd Apr 2022 11:52 AM

ADVERTISEMENT

 

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப்படையான அசாம் ரைபிள்ஸில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 104

விளையாட்டு பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. கால்பந்து (Football) - 20
2. குத்துச்சண்டை (Boxing) - 21
3. படகுபோட்டி (Rowing) - 18
4. வில்வித்தை (Archery) - 15
5. கிராஸ் கன்ட்ரி (Cross Country) - 10
6. தடகளம் (Atheletics) -10
7. போலோ (Polo) - 10 

ADVERTISEMENT

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் சர்வதேச, தேசிய, பல்கலை, பள்ளிகள் இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

உயரம்: ஆண்கள் 170 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி யில் 18 முதல்  23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.assamrifles.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.04.2022

மேலும விவரங்கள் அறிய  www.assamrifles.gov.in/DOCS/NEWS/RALLY62.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT