வேலைவாய்ப்பு

துணை ராணுவப்படையில் கொட்டிக்கிடக்கும் குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்!

30th Sep 2021 01:44 PM

ADVERTISEMENT

 

துணை ராணுவப்படைகளில் ஒன்றான 'அசாம் ரைபிள்ஸ்' படையில் ரைபிள்மேன், ஹவில்தார், வாரன்ட் ஆபிசர் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 1230 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 1230 

நிறுவனம்: அசாம் ரைபிள்ஸ்

ADVERTISEMENT

பணி: குரூப் 'பி' மற்றும் 'சி' பணிகள் (Technical and Tradesmen)

காலியிடங்கள்: நாகலாந்தில் - 105, உத்தரப்பிரதேசம் - 98, பிகார் - 91, மிசோரம் - 75, மணிப்பூர் - 74, ஆந்திரம் - 64, மஹாராஷ்டிரம் - 61, தமிழழ்நாடு - 54, ஜார்க்கண்ட் -  51, மேற்குவங்கம் - 50 , புதுச்சேரி - 03 உள்பட மொத்தம் 1230 இடங்கள் உள்ளன.

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் படித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: அறிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலான பணியிடங்களுக்கு 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும்,  மற்ற பணியிடங்களுக்கு 18 - 25, 20 - 25, 20 - 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதித் தேர்வு, எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.c.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

ஆன்லைனலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2021

மேலும் விவரங்கள் அறிய www.assamrifles.gov.in/DOCS/NEWS/TECH%20TDN.pdf என்ற லிங்கை கிளஇக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tags : job news in tamil மத்திய அரசு வேலை jobs employment வேலைவாய்ப்பு செய்திகள் assamrifles Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT