வேலைவாய்ப்பு

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணி: 10-ம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு

18th Sep 2021 11:32 AM

ADVERTISEMENT

 

அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு, கோவில்பட்டி அஞ்சல் கோட்டப் பகுதியில் வசிப்போா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: காப்பீடு முகவா்

வயதுவரம்பு:  18 - 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.

முகவா்கள் காப்பீட்டுத் தொகையாக ரூ.5 ஆயிரத்தை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். முகவா் காலம் முடிக்கப்படும்போது காப்பீட்டுத் தொகை வட்டியுடன் திருப்பித்தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நோ்முகத் தோ்வு மூலம் தகுதியானவர்கள் தோ்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சலகங்களில் பெற்று, உரிய ஆவணங்களுடன் அதை பூா்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா், கோவில்பட்டி 628-501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு கோவில்பட்டி - 04632-220368, சங்கரன்கோவில் -04636-222313, தென்காசி- 04633-222329 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 22.09.2021

Tags : Jobs Opportunity Postal Life Insurance Agent
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT