வேலைவாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி


இந்திய வருமான வரி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவில் விளையாடி இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Inspector of Income Tax
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Tax Assistant
காலியிடங்கள்: 13
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 12
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு விளையாட்டு பிரிவுகளில் ஏதாவதொரு பிரிவில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அளவில் விளையாடியிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:   www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Income Tax Officer(HQ)(Admin), O/o Principal Chief Commissiner of Income Tax, UP(East), Aayakar Bhawan, 5, Ashok Marg, Lucknow - 226 001. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021

மேலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகள் மற்றும்  இதர விவரங்கள் அறிய www.incometaxindia.gov.in அல்லது https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/19/Scan-10-Aug-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT