வேலைவாய்ப்பு

நில அளவைப் பணி: 3 மாத பயிற்சிக்கு அரசு அழைப்பு

22nd Oct 2021 06:33 AM

ADVERTISEMENT

நில அளவைக்கான உரிமம் பெற நடத்தப்படும் மூன்று மாத பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை இயக்குநரகம், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு நிலஅளவைப் பயிற்சி நிலையத்தில் 100 பேருக்கும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் பயிற்சி நிலையத்தில் 50 பேருக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும். இப் பயிற்சியைப் பெறுவோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படாது. நில அளவைப் பயிற்சிக்கான கட்டணம் ரூ.30 ஆயிரம். கட்டடப் பொறியியலில் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபா்

1-ஆம் தேதிப்படி வயது 50-க்கும் மிகையாமல் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை முதல்வா்-இணை இயக்குநா் (பயிற்சி), நிலஅளவைப் பயிற்சி நிலையம், ஒரத்தநாடு - 614625, தஞ்சாவூா் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Tags : jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT