வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

21st Oct 2021 02:00 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 119

நிர்வாகம்: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

பணி: உணவு பாதுகாப்பு அதிகாரி

ADVERTISEMENT

தகுதி : உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, எண்ணெய் தொழில்நுட்பம், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வேதியியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது மருத்துவத் துறையில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

சம்பளம்: மாதம் ரூ.35,900 - ரூ.1,13,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வு, சான்றிதழ்கள் சரிப்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கும்  விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்து அறநிலைத்துறையில் செவிலியர், உதவியாளர் வேலை

விண்ணப்பிக்கும் முறை : www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.700 மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 300 கட்டணமாக செலுத்த வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2021

மேலும் விபரங்கள் அறிய www.mrb.tn.gov.in அல்லது https://fso21.mrbonline.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Tags : Food Safety Officer மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் recruitment 2021 jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT