வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? இந்து அறநிலைத்துறையில் செவிலியர், உதவியாளர் வேலை

20th Oct 2021 01:35 PM

ADVERTISEMENT


இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள திருத்தணிகை வட்டத்திற்குள்பட்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மருத்துவ அதிகாரி, செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ந.க.எண்.2053ய2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Medical Officer  - 02
சம்பளம்: மாதம் ரூ.75,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.

பணி: Staff Nurse/MLHP) - 02
சம்பளம்: மாதம் ரூ.14,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Multi Purpose Hospital Worker/Attender - 02
சம்பளம்: மாதம் ரூ.6,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: 8 ஆம் தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | சென்னை ஐஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி

விண்ணப்பிக்கும் முறை: www.tiruttanigaimurugan.org மற்றும் https://tnhrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் கெஜட்டெட் அதிகாரியின் கையொப்பம் பெற்ற தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து  கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிக்கை, திருவள்ளூர் மாவட்டம் - 631209

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.11.2021

Tags : velaivaippu seithigal job news in tamil TNHRCE recruitment 2021 வேலைவாய்ப்பு அறிவிப்பு Employment news அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT