வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தினமணி

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி நூலகர், பேராசிரியர் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறை இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் 

மொத்த காலியிடங்கள் : 312 

பணி : Assistant Professor
பணி : Assistant University Librarian
பணி : Associate Professors
பணி : Deputy Librarian and Deputy Director of Physical Education 

தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள துறையில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7 ஆவது சம்பளக்குழுவின் அறிவிப்பின்படி சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://aurecruitment.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் வரும் 27 ஆம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2021
 
மேலும் விபரங்களை அறியவும், www.annauniv.edu அல்லது https://aurecruitment.annauniv.edu/ என்ற லிங்கை கிளிக் செய்து முழுவிவரத்தை அறிந்துகொண்டு விண்ணப்பித்து பயனடையவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT