வேலைவாய்ப்பு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் வேலை... இளநிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும்!

தினமணி


தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள 33 விஞ்ஞானி 'சி' மற்றும் விஞ்ஞானி 'டி' பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT) 

மொத்த காலியிடங்கள் : 33 

பணி : Scientist 'C' and Scientist 'D' 

சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,09,200 வழங்கப்படும். 

தகுதி : பொறியியல் அல்லது தொழில்நுட்பம் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளில் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://recruitment-delhi.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொதுபிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பதாரர்கள் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் ஸ்கிரினீங் தேர்வு, தனிப்பட்ட தொடர்பு தேர்வு, நேர்முகத்தேர்வு  அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2021

மேலும் விபரங்கள் அறிய www.nielit.gov.in அல்லது https://recruitment-delhi.nielit.gov.in/PDF/MeitY/Detailed_Advt_Scientit_C_and_D.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

SCROLL FOR NEXT