வேலைவாய்ப்பு

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

24th Nov 2021 11:35 AM

ADVERTISEMENT


சென்னையில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள்(நவ.25) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பயிற்சியின் பெயர்: Graduate Apprentice

காலியிடங்கள்: 63

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கலம் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | யப்பா... தம்பி விஐபி... அரியலூரில் நவ.28-இல் வேலைவாய்ப்பு முகாம்... உடனே போங்க

உதவித்தொகை: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.11,110 வழங்கப்படும்.

பயிற்சியின் பெயர்: Technician Apprentice

காலியிடங்கள்: 10

இதையும் படிக்க | பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள்

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக், டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

இதையும் படிக்க | வ.உ.சிதம்பரனார் துறைமுக கழத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பங்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 10.11.2021 தேதிக்கு முன் பதிவு செய்த பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் www.boal-srp.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2021

ADVERTISEMENT
ADVERTISEMENT