வேலைவாய்ப்பு

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தேசிய நெடுஞ்சாலைத் துறையில் துணை மேலாளர் வேலை

10th Nov 2021 02:51 PM

ADVERTISEMENT


சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.NTA/NHAI/2021/1

பணி: Deputy Manager(Finance Accounts)

காலியிடங்கள்: 17

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கிகளில் 1828 அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு

தகுதி: பி.காம்., சிஏ., எம்பிஏ(நிதி) போன்ற ஏதாவதொரு படிப்புடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேசிய தேர்வு ஆணையத்தால்(என்டிஏ) நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு ஆன்லைனில் நடைபெறும். 

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நடைபெறும். தேர்வுக்கான அனுமதிச் சீட்டு விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்கலாம் | வேலை வேண்டுமா...? இஸ்ரோவில் மொழிப்பெயர்பாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரினர் ரூ.500. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2021

மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Vacancy-Circular-of-Dy-Manager-in-NHAI.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT