வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா...? ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

29th May 2021 03:22 PM

ADVERTISEMENT


ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அலுவலகங்களில் காலியாக உள்ள மேலாளர், உதவி கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : AI Airport Service Limited

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

ADVERTISEMENT

பணி: Manager-Finance - 04
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணியிடம்: தில்லி, கொல்கத்தா, சென்னை
தகுதி: Chartered Accountant தேர்ச்சி அல்லது Cost Accountant -இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.   

பணி: Officer-Accounts - 07
சம்பளம்: மாதம் ரூ.32,200
பணியிடம்: தில்லி, கொல்கத்தை, மும்பை, சென்னை
தகுதி: Inter Chartered Accountant, Inter Cost and Management Accountancy அல்லது MBA (Finance) போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

பணி: Assistant-Accounts - 04
சம்பளம்: மாதம் ரூ.21,300
பணியிடம்: மும்பை, தில்லி
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதோடு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திரையிடல், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :  அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து hrhq.aiasl@airindia.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.airindia.in அல்லது http://www.airindia.in/writereaddata/Portal/career/937_1_AIASL-ADVT.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

 

Tags : recruitment-2021 ai airport service jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT