வேலைவாய்ப்பு

மத்திய அரசில் டெக்னீசியன் வேலை வேண்டுமா..? ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

6th May 2021 01:01 PM

ADVERTISEMENT


பெங்களூருவில் செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகங்களில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
விளம்பர எண். 4/2021

பணி: Technician

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Fitter - 06
2.Turner - 01
3.Machinist - 03
4.Electrician - 01
5.Electronic Mechanic - 01
6.Draughtsman - 02
7.painter -01
8.Electroplator/Electroplating - 01
9.Sheet Metal Worker - 01

வயதுவரம்பு: அனைத்து பணியிடங்களுக்குமான 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.19,900

தகுதி: அறிவியல் பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு தாள் I, II, மற்றும் III என மூன்று தாள்களைக் கொண்டதாக இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:  www.nal.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2021

மேலும் விவரங்கள் அறிய www.nal.res.in இணையதளத்தில் அல்லது https://www.nal.res.in/medias/content_image/other/1822/gr-ii-advt-2021-1.pdf என்ற லிங்கில் சென்று படித்து தெரிந்துகொள்ளவும்.

Tags : job Recruitment 2021 Central Govt Jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT