வேலைவாய்ப்பு

பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் வேலை!

5th May 2021 04:54 PM

ADVERTISEMENTவெலிங்டன் (நீலகிரி) செயல்பட்டு வரும் மத்திய அரசின் பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் கல்லூரியில் காலியாக உள்ள 83 ஸ்டெனோகிராஃபர் கிரேடு II, லோயர் டிவிஷன் கிளார்க், எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Defence Services Staff College

மொத்த காலியிடங்கள்: 83 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Stenographer Grade II - 04 
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

ADVERTISEMENT

பணி:  Lower Division Clerk (LDC) - 10
பணி:  Civilian Motor Driver (Ordinary Grade) - 07
பணி:  Sukhani - 01
பணி:  Carpenter - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பணி:  Multi Tasking Staff – (Office and Training) - 60
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: 10,12, ஐடிஐ மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் தட்டச்சு, சுருக்கெழுத்தில் திறன் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணிவாரியான தகுதி விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 22.05.2021 தேதியின்படி 18 முதல் 25, 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன், உடற்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின்படி விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.05.2021

மேலும் விவரங்கள் அறிய http://dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Tags : Job employment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT