வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? வன மரபியல் துறையில் துணை ரேஞ்சர் வேலை 

17th Mar 2021 12:56 PM

ADVERTISEMENTஇந்திய வன மரபியல் மற்றும் இனப்பெருக்க துறையில் நிரப்பப்பட உள்ள வனக் காவலர் மற்றும் துணை ரேஞ்சர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: CTR-1/24-124/2020/Deputation

பணி: Forester - 01

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தகுதி: வனவியல் பயிற்சி முடித்து 8 ஆண்டுகள் வனக் காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Ranger - 01

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வனவியல் பயிற்சி முடித்து 10 ஆண்டுகள் வனக்காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை The Director, IFGTB என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.ifgtb,icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, IFGTB Forest Campus, R.S.Puram, Coimbatore(TN) - 641 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2021

மேலும் விவரங்கள் அறிய http://ifgtb.icfre.gov.in/advertisement/CTR-I24-124.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT