வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

4th Mar 2021 03:18 PM

ADVERTISEMENT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.

அதன்படி நடப்பு 2021-22 ஆம் ஆண்டுக்கான தேர்வு 712 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று (மார்ச் 4) வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 712 

ADVERTISEMENT

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 24

வயது வரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும் மத்திய அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. 

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு வருகிற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும். 

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படும். பின்னர் முதன்மைத் தேர்விலும் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:  www.upsconline.nic.in என்ற யுபிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

யுபிஎஸ்சி யின் அறிவிக்கையைப் பெற இங்கே அழுத்தவும்

Tags : UPSC
ADVERTISEMENT
ADVERTISEMENT