வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலை

3rd Mar 2021 07:38 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

பணி: உதவி கணக்கு அலுவலர்

காலியிடங்கள்: 18

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.56,300 - 1,78,000

தகுதி: பட்டயக் கணக்கு(சிஏ) அல்லது ஐசிடபுள்யூஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 -ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் ரூ.1000 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2021

மேலும் விவரங்கள் அறிய www.tangedco.gov.in  அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/Notification-AAO-2021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Tags : jobs recruitment Tamilnadu Govt Jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT