வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பை இழக்காதீர்கள்: இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி 

9th Jun 2021 01:08 PM

ADVERTISEMENTமத்திய அரசிற்கு உள்பட்டு செயல்பட்டு வரும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் காலியாக உள்ள 14 ஆலோசகர் பணியிடங்ககளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மற்றும் அஞ்சல் வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிர்வாகம் : Directorate General of Civil Aviation (DGCA) 

பணி: Consultant -Senior FlightOperations Inspector(Aeroplane)
காலியிடங்கள்: - 03
சம்பளம்: மாதம் ரூ. 6,13,500

ADVERTISEMENT

பணி: Consultant -Flight Operations Inspector (Aeroplane)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ. 4,22,800/-

பணி: Consultant -Flight Operations Inspector (Helicopter)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.2,50,800

தகுதி : DGCA அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் இந்திய விமான போக்குவரத்து பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு :  63 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://dgca.gov.in அல்லது https://www.dgca.gov.in/digigov-portal/Upload?flag=iframeAttachView&attachId=150429170 என்னும் இணையதள லிங்கில் உள்ளஅறிவிப்பினை படித்துவிட்டு ஆன்லைன் வழியில் பூர்த்தி செய்து வி்ண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Recruitment Section, A Block, Directorate General of Civil Aviation, Opposite Safdarjung Airport, New Delhi-110 003 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.dgca.gov.in/digigov-portal/Upload?flag=iframeAttachView&attachId=150429170 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  09.06.2021 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி தேதி: 11.06.2021

Tags : recruitment jobs employment recruitment-2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT