வேலைவாய்ப்பு

மத்திய பொதுத் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

3rd Jun 2021 04:20 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL)

பணி : Technical Officer

ADVERTISEMENT

காலியிடங்கள்: 06

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000 

வயது வரம்பு:  30.04.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 07.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road,Naraina, New Delhi-110028, Ph.No.011-25774645 /011-25777676 மற்றும் ECIL Zonal Office, 4th Floor, Appejay House, 15, Park Street, Kolkata-700016 (West Bengal) Ph.No.033-2217269 என்ற விலாசத்தில் நடத்தப்படும். 

மேலும் விபரங்களை அறிய www.ecil.co.in அல்லது http://www.ecil.co.in/jobs/Advt_No_20_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs recruitment 2021 ECIL recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT