வேலைவாய்ப்பு

சென்னை ஐஐடி-ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்! 

31st Jul 2021 02:23 PM

ADVERTISEMENT


சென்னை ஐஐடி-இல் செவிலியர், உதவி பாதுகாப்பு அலுவலர், இளநிலை பொறியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
விளம்பர எண். IITM/R/4/2021 dated 21.07.2021

பணி: Staff Nurse -  03
குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி நர்சிங் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் 3 ாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Security Officer - 03
குறைந்தபட்டம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? தமிழக மீன்வளத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை!

ADVERTISEMENT

பணி: Junior Superintendent - 10
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று 2 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்கள் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant - 30
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Technician - 34
பணி: Junior Technician (Maintenance) - 06
பணி: Junior Technician (Telephones) - 01
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ, பட்டம், ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள அறிவியல் பாடங்களில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணி: Junior Library Technician - 04
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று எல்எல்ஐஎஸ் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.recruit.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/include/Detail-Advt-R421.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

Tags : job alert 2021 வேலை மத்திய அரசு வேலை Recruitment-2021 IITMRecruitment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT