வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

28th Jul 2021 03:33 PM

ADVERTISEMENT


சென்னை அடையாற்றில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விளம்பர எண். 1/2021 No.4(109)2021-E1

பணி: Senior Scientist - 03

தகுதி: கெமிஸ்ட்ரி, பயாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.1,19,532

வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientist - 05
தகுதி: பாலிமர் கெமிஸ்ட்ரி, பாலிமர் சயின்ஸ்,  பயோ ஆர்கானிக்ஸ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இயற்பியல், பயோ இயற்பியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,03,881

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செமினார் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruit.clri.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Recruitment Section, CSIR-Central, Leather Research Institute, Sardar Patel Road, Aayar, Chennai - 600 020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2021

அஞ்சலில் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 23.08.2021

Tags : recruitment jobs employment வேலைவாய்ப்பு அறிவிப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT